புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (19:34 IST)

இளையதளபதி, புரட்சி தளபதியுடன் கீர்த்திசுரேஷ்-வரலட்சுமி

ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பது என்பது கோலிவுட் திரையுலகில் தற்போது சர்வ சாதாரணம் தான். ஆனால் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களில் இரண்டு நாயகிகள் நடிப்பது என்பது அபூர்வ நிகழ்வாகும். அப்படி ஒரு நிகழ்வுதான் தற்போது நடந்துள்ளது

ஆம், இளையதளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்திலும் புரட்சி தளபதி விஷால் நடித்து வரும் 'சண்டக்கோழி 2' படத்திலும் கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடித்துள்ளனர். இதில் கீர்த்திசுரேஷ் இரண்டு படங்களிலும் நாயகியாகவும், வரலட்சுமி இரண்டு படங்களிலும் நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்துள்ளது இன்னொரு ஒற்றுமை
 
மேலும் 'சண்டக்கோழி 2' வரும் ஆயுதபூஜை தினத்திலும் 'சர்கார்' வரும் தீபாவளி தினத்திலும் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகவுள்ளது இன்னொரு ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்கு பின்னர் இருவருக்குமே மார்க்கெட் உயர வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன,.