வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (08:15 IST)

ஆண், பெண் முத்தக்காட்சிகளை குழந்தைகளை பார்க்க விடக்கூடாது: வனிதா விஜயகுமார்

ஆண், பெண் முத்தக்காட்சிகளை குழந்தைகளை பார்க்க விடக்கூடாது
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார், சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்தார் என்பதும், இந்த திருமணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் வனிதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றுக்கு நெட்டிசன்களின் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இந்த பதிவில் அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அந்த அறிவுரையில் உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன்களை பார்க்க அனுமதிக்க வேண்டாம். இந்த கார்ட்டூன் படங்களில் முத்தக்காட்சிகள், அடல்ட் காட்சிகள் அதிகம் இருப்பதால் அவை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிக்கும்போதோ அல்லது அவர்கள் திருமணம் செய்யும் போதோ அவர்கள் முத்தமிடுவதை குழந்தைகள் ஒருபோதும் பார்க்க அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
 
வனிதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கேலி, கிண்டல்களுடன் கூடிய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பீட்டர்பாலை திருமணம் செய்யும்போது குழந்தைகள் முன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுத்த வனிதா, குழந்தைகள் முன் முத்தமிடுவது குறித்து கூறுவதற்கு தகுதியற்றவர் என்று பல நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் தான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளாமல் பலர் தேவையில்லாமல் கமெண்ட்டுக்களை பதிவு செய்வதாக வனிதா கண்டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது