செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (19:02 IST)

நாமெல்லாம் ஒன்றாக சினிமாவுக்கு வந்தோம் – அஜித்தை பாராட்டிய வனிதா!

நடிகர் அஜித்குமாரின் 28 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு உள்ளனர்.

நடிகர் அஜித் ஆகஸ்ட் 2 ஆம் தேதி 1992 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். தற்போது அவர் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களுள் ஒருவராக இருந்து வருகிறார். 28 ஆண்டுகள் இப்போது அவர் தமிழ் சினிமாவில் கடந்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக காமன் டிபியை உருவாக்கியுள்ளனர்.

அதைப் பலரும் சமூகவலைதளங்களில் பகிர, இப்போது சர்ச்சை நாயகி வனிதாவும் அதைப் பகிர்ந்து ‘நம்ப முடியவில்லை… ஆனால் உண்மை. நாம் அனைவரும் ஒன்றாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தோம். நல்லது கெட்டதுகளை அனுபவித்தோம். இந்த வெற்றிகளுக்கு அஜித் தகுதியானவர். என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த, எளிய, உண்மையான மனிதர்களில் நீங்கள் ஒருவர். உங்களுக்கும் ஷாலினிக்கும் கடவுள் ஆசிகளை வழங்கட்டும்’ எனக் கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பாராட்டுகளுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சிலர் வழக்கம் போல வனிதாவை சிலர் கேலியும் செய்துள்ளனர்.