செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (19:52 IST)

இன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்

இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட மறந்துபோன சென்னை மக்கள் இன்று ஆனந்தத்துடன் மழையில் நனைந்தனர். 
 
இந்த நிலையில் நாளை காலை அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வானில் இருள்' என்ற பாடல்  வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வந்த ஒருசில நிமிடங்களில் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் சுறுசுறுப்பாக 'வானில் இருள்' என்ற ஹேஷ்டேக்கை ஆரம்பித்து அதனை இந்திய அளவில் டிரெண்டுக்கும் கொண்டு வந்துவிட்டனர்.
 
இதுவொரு மெலடி பாடல் என்பதால் அஜித்துக்கும் வித்யாபாலனுக்கும் இந்த பாடல் இருக்கும் என கருதப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த பாடலை கேட்க அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆவலுடன் உள்ளனர்.
 
எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது