1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 27 ஜூன் 2021 (15:42 IST)

கமல் பெயரை எழுதிய கேரள இளம்பெண்ணுக்கு உலக சாதனை சான்றிதழ்!

கமல் பெயரை எழுதிய கேரள இளம்பெண்ணுக்கு உலக சாதனை சான்றிதழ்!
கமல்ஹாசனின் உருவத்தை புள்ளிகள் மற்றும் கோடுகள் இல்லாமல் அவருடைய பெயரை மட்டுமே எழுதி உருவ படத்தை வரைந்த கேரளா இளம்பெண்ணுக்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது 
 
பொதுவாக ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்றால் புள்ளிகள் மற்றும் கோடுகள் வரைந்து தான் வரைவது உண்டு. ஆனால் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்பவர் கமல்ஹாசன் பெயரையே அவரது உருவப் படத்தை மாற்றியுள்ளார் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
இந்த நிலையில் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா  புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!