Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஷக்தி, ஆரவ், காயத்ரி மூவரையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற சொல்லும் வையாபுரி!

ஷக்தி, ஆரவ், காயத்ரி மூவரையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற சொல்லும் வையாபுரி!

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (11:34 IST)

Widgets Magazine

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து அதை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. இந்த ஷக்தி, காயத்ரி இவங்க இரண்டு பேரும் எப்ப நாமினேஷன்ல வருவாங்க அவங்கள எப்ப வெளியேற்றலாம் என்பது தான்.


 
 
காரணம் இவர்கள் பிக் பாஸ் வீட்டில் தனி ராஜாங்கமே நடத்தி வருகிறார்கள். இவர்கள் வைத்தது தான் சட்டம், இவர்கள் சொல்வது தான் சரி அதை யாரவது எதிர்த்தால் அவர்களை கார்னர் செய்வது என ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் இவர்கள்.
 
இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்களின் குறையை தீர்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் பிக் பாஸ். இன்று வெளியான புரோமோ வீடியோவில் கயிறு இழுக்கும் போட்டி ஒன்று பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு வைக்கப்படுகிறது.
 
காயத்ரி, ஷக்தி, ஆரவ், ஜூலி ஆகியோர் ஒரு அணியாகவும், சினேகன், வையாபுரி, கணேஷ், ரைசா, பிந்து மாதவி ஆகியோர் ஒரு அணியாகவும் அந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதில் ஆரவ், காயத்ரி, ஷக்தி, ஜூலி ஆகியோர் அணி தோல்வியடைகிறது.

 

 
 
இதனையடுத்து தோல்வியடைந்த அணியில் உள்ள ஷக்தி, காயத்ரி, ஆரவ் ஆகியோரில் யாரை அடுத்த வாரம் நாமினேஷனில் நாமினேட் செய்கிறீர்கள் என வெற்றி பெற்ற அணியில் உள்ளவர்களிடம் கன்ஃபசன் ரூமில் கேட்கிறார் பிக் பாஸ்.
 
அதில் ரைசா, சினேகன் ஆகியோர் ஆரவ் வெளியேற வேண்டும் எனவும், பிந்துமாதவி, கணேஷ் ஆகியோர் ஷக்தி வெளியேற வேண்டும் எனவும் கூறுகின்றனர். ஆனால் அதற்கு பின்னர் வரும் வையாபுரி ரசிகர்களின் மனம் அறிந்து இவர்கள் மூன்று பேரும் வெளியேறினால் நல்லா இருக்கும் என தனது ஆதங்கத்தை சொல்கிறார். இந்த கயிறு இழுக்கும் போட்டியில் ஓவியா கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தனுஷுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

தனுஷின் கேரவனுக்கு திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், மின்வாரிய அதிகாரிகள் ...

news

தமிழில் நடிக்க பயப்படும் துல்கர் சல்மான்

தமிழில் அதிகம் நடித்தால், மலையாளத்தில் உள்ள இடம் பறிபோய்விடுமோ என்று பயப்படுகிறார் ...

news

சல்மான்கானை இந்த டிரஸ் போட்டா கட்டிப்பிடிப்பது? சனாகானை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சிம்பு நடித்த சிலம்பாட்டம் உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் பல இந்தி படங்களிலும் நடித்தவர் ...

news

இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம்: கமலின் புதிய டுவீட்

ஒவ்வொரு நாளும் நள்ளிரவிலும் ஒரு டுவீட்டை தட்டி விடுவதை உலக நாயகன் கமல்ஹாசன் டிரெண்ட் ...

Widgets Magazine Widgets Magazine