திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (09:59 IST)

போ புயலே போய்விடு: நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை!

தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் புயல் வரும்போது மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கி விட்டு தான் செல்கிறது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், பூம்புகார், சென்னை ஆகிய நகரங்கள் கடந்த ஆண்டுகளில் புயலால் பெரும் சேதங்களை சந்தித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு பெரும் சேதங்களை உண்டாக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கவிஞர் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் சேதம் உண்டாக்காமல் போய்விடு புயலே என்றும் சுகமாய் கடந்து சுவாசம் ஆகிவிடு என்றும் கவிதை பாணியில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். இதோ அந்த கவிதை:
 
 
போ புயலே
போய்விடு
 
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
 
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
 
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
 
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
 
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
 
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?