1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (12:03 IST)

பொதுவாழ்வுப் போராளிகளே! பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன: வைரமுத்து கவிதை

கடந்த சில வருடங்களாகவே கவியரசு வைரமுத்து குறித்து சர்ச்சைக்குரிய பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அவர் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படாமல் தன்னுடைய பணியை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார் 
 
அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருவார் என்பதும் தன்னுடைய சொந்த விமர்சனக்கள் குறித்த விளக்கம் எதற்குமே அவர் சமூக வலைத்தளங்களில் பதிவு சொல்வதில்லை என்று கூறப்படுவது உண்டு 
 
இந்த நிலையில் தற்போது பொது வாழ்வில் இருக்கும் போராளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் கவிதை வடிவில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் வைரமுத்து கூறியிருப்பதாவது:
 
பொதுவாழ்வுப் போராளிகளே!
பொய்ப்பழிகள் 
புன்னகைக்குரியன.
 
சலசலப்பு இல்லாவிடில்
பனங்காட்டுக்கேது பாட்டு?
அவதூறுகள் இல்லாவிடில்
உயிர்வாழ்வுக்கேது ஊட்டம்?
 
பழிக்கப்படும்வரை நீங்கள் 
உயிர்ப்போடும்...
உயர்வோடும்...