செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 மே 2020 (17:46 IST)

விஜய்சேதுபதி படம் வெற்றி பெற வைரமுத்து வாழ்த்து!

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 
’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க உள்ளதாகவும் இதனை அடுத்து திரையரங்குகள் திறந்தவுடன் வெளிவரும் முதல் படம் இந்தப் படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
திரையரங்குகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் ’க/பெ ரணசிங்கம்’ படக்குழுவினர் தற்போது புரமொஷன்களை வெளியிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் வெளியானது. குறிப்பாக இந்த படத்தின் டீசரும் அதிலுள்ள காட்சிகளும் விஜய் சேதுபதியின் வசனங்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவேசமான நடிப்பும் பலரை கவர்ந்தது
 
இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தின் டீசரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவியரசு வைரமுத்து தனது பாணியில் கவிதை வடிவில் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
 
நல்ல கலைகளெல்லாம் 
மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை.
இந்தப் படம் இன்னொரு வலி.
இது வெற்றிபெறக் கூடும் என்று
என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது.
பார்ப்போம்..