வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:32 IST)

வடிவேலுவின் அடுத்த படத்தை தயாரிக்கிறதா லைகா?

வடிவேலு நடிக்க உள்ள நாய் சேகர் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். அந்த படம் பெரிய வெற்றி பெற்றதற்குக் காரணம் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளும் முக்கியக் காரணியாக அமைந்தன. அதிலும் அவர் ஏற்றிருந்த நாய் சேகர் கதாபாத்திரம் அவரின் அடையாளங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது வடிவேலுவின் திரை வாழ்க்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் சுராஜ் ஒரு படத்தை உருவாக்க உள்ளார். அந்த கதாபாத்திரத்திலும் வடிவேலுவே நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இம்சை அரசன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டுவதற்காக வடிவேலு இந்த படத்தை லைகா தயாரிப்பில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.