செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:20 IST)

கண்டிப்பா அவர் படத்தில் நடிப்பேன்…. வடிவேலு ஆசைப்படும் இளம் இயக்குனர்!

நடிகர் வடிவேலு இப்போது நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போதுதான் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகிறார் என்பதும் அவர் லைக்காவின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடி இல்லை என்றாலும் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வடிவேலு ரீஎன்ட்ரி ஆகும் படத்தில் சந்தோஷ் நாராயணன் அட்டகாசமான பாடல்களை கம்போஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்மந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் பேசும்போது ‘நான் வடிவேலு படத்துக்கு இசையமைப்பது மிகவும் சந்தோஷம். நானும் இயக்குனர் நலனும் வடிவேலு சார் பற்றி நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பொம். இந்த செய்தி தெரிந்தால் அவர் மிகவும் சந்தோஷப் படுவார்’ எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட வடிவேலு ‘ கண்டிப்பாக நான் நலன் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பேன். அது சம்மந்தமாக பேசி வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.