திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (10:07 IST)

மீண்டும் சுராஜ் இயக்கத்தில் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கும் வடிவேலு...!

வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம். இந்த பாடல் படத்தின் முக்கியமான அம்சமாக பேசப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் வடிவேலு “அடுத்து வரிசையாக படங்களில் நடிக்க போகிறேன். இயக்குனர் சுராஜ்  இயக்கத்திலேயே மீண்டும் ஒரு படம். டபுள் ஹீரோ வேடத்தில் நடிக்க உள்ளேன். அந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.

வடிவேலு நடித்துள்ள மாமன்னன், சந்திரமுகி 2 என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.