1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2016 (13:12 IST)

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த வைகைபுயல்!!

வடிவேலுவின் டயலாக்குகள் மற்றும் அவரது மேனரிஸம் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் ரசிக்க வைக்கும். 


 
 
ரஜினி மற்றும் வடிவேலு கூட்டணியில் சந்திரமுகி படத்தில் வந்த காமெடி பெறிதும் பேசப்பட்டது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே ஒத்துக்கொண்டார். சந்திரமுகி வெளியாகி சில வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த லிங்கா படத்தில் வடிவேலுவை நடிக்க கேட்டு அணுகி உள்ளனர்.
 
ஆனால் லிங்கா படத்தில் இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் வடிவேலு வந்து போவது போல் கதை அமைக்கப்பட்டிருந்ததால் அதில் நடிக்க வடிவேலு மறுத்துள்ளார். 
 
நடிப்பதாக இருந்தால் முழு படத்திலும் வருவது போல் நடிப்பேன், இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு சொல்லிவிட்டாராம்.