செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (23:14 IST)

தனுஷ் பட இயக்குநரின் நூலை வெளியிட்ட வடிவேலு !

தமிழ் சினிமாவில் பிரபல  இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை  வைகை புயல்    வடிவேலு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயகுநராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். இதையடுத்து, அவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இ ந் நிலையில் உச்சியென்பது என்று  பெயரிட்டப்பட்டுள்ள இவரது கவிதை நூலை,  மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வடிவேலு  இன்று வடிவேலு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே  நடிகர் வடிவேலு, தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற புத்தகங்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.