வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (12:59 IST)

யாராவது எதையாவது கொளுத்திப் போட்டா அதில் மாட்டீரக் கூடாது - வடிவேலு பேட்டி

தெனாலிராமன் படத்துக்கு எழுந்த எதிர்ப்பை சமர பேச்சுவார்த்தை மூலம் கடந்திருக்கிறார்கள் வடிவேலுவும், ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்டும். தெலுங்கு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தை முடித்த பின் வடிவேலு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 
 
அப்போது அவர் பேசியதாவது - 
 

இந்தப் படம் சிவாஜி ஐயா பண்ணியிருக்காங்க. தெனாலிராமன்ங்கிற பெயர்ல. என்னோட உடல்மொழியோட சேர்த்து பண்ணணும்னு ஆசைப்பட்டு செலக்ட் பண்ணுன கதைதான் இந்தக் கதை. இரவும் பகலுமா ரொம்ப நாள் டிஸ்கஸ் பண்ணி... நிறைய வேற கற்பனையிலதான் பண்ணியிருப்போமே தவிர யார் மனசையும் புண்படுத்துற மாதிரி இருக்காது.

அழகான ஒரு தகப்பனா நடிச்சிருக்காரு இந்த ராஜ கேரக்டரு. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். எல்லாருமே ரசிக்கலாம். உலகமே இன்னைக்கு இந்தப் படத்தை எதிர்பார்த்துகிட்டு இருக்கு. இந்த நேரத்தில் இந்த மாதிரி ஒரு துரதிர்ஷ்டமான விஷயம் நடந்தது ரொம்ப கஷ்டமாகதான் இருந்திச்சி எனக்கு.

ஒட்டு மொத்த தமிழ் மக்கள் சார்பா நான் மறுபடியும் சொல்றேன், நாம எல்லோரும் அண்ணன், தம்பியாதான் இருக்கணும். தெலுங்கு மக்கள், கன்னட மக்கள் எல்லாருமே ஒற்றுமையாக இருக்கணும். யாராவது எதையாவது கொளுத்திப் போட்டா அதில் மாட்டீரக் கூடாது என்றார்.
இந்த சந்திப்பின் போது ஏஜிஎஸ் இயக்குனர் ரங்கராஜன், தெலுங்கு அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.