1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:22 IST)

வைகைப்புயல் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் என்பவர் காலமானார். அவருக்கு வயது 52. 
 
நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமான நிலையில் நேற்று வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் என்பவர் காலமானார். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமானதாக தெரிகிறது  
 
ஜெகதீஸ்வரன் கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி கடை நடத்தி வந்ததாகவும் திடீரென உடல் நலக்குறைவால் காலமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே சிம்பு நடித்த காதல் அழிவதில்லை திரைப்படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran