வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (20:10 IST)

லைகாவின் 5 படங்களில் வடிவேலு!

நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக ரெட்கார்டு போடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் அந்த ரெட்கார்டு நீக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நடிகர் வடிவேலு லைக்கா நிறுவனத்திற்கு மட்டுமே 5 படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் இரண்டு படங்களில் அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், முதல் படம் லைகா மற்றும் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வரும் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இன்னொரு படம் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் மற்ற மூன்று படங்களில் காமெடியனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து தனக்கு ரெட்கார்டு நீக்கப்பட்டதற்கு ஒருவகையில் லைகா சுபாஷ்கரண் தான் காரணம் என்றும் அதன் மூலம் அவர் சபாஸ்கரன் ஆகிவிட்டார் என்றும் வடிவேலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்