வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (10:25 IST)

வடசென்னை படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி?

வெற்றிமாறன் இயக்கும் `வட சென்னை' படத்தில் தனுஷ், விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம்   நடைப்பெற இருந்தது.


 
முன்னதாக முதற்கட்ட படப்பிடிப்பின் போதே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்டது. ஆனால் அதனை  மறுத்த படக்குழு, விஜய் சேதுபதி மார்ச்சில் பங்கேற்பார் என்று கூறியிருந்தது. படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போவதாலும், மற்ற படங்களில் தான் ஒப்பந்தமாகி இருப்பதாலும் `வடசென்னை' படத்தில் நடிக்க தேதி இல்லை என்று கூறி படத்தில் விஜய்  சேதுபதி விலகியதாக கூறப்படுகிறது.
 
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான் தகவல் எதுவும் வெளியாகவில்லை.