முடிவுக்கு வந்தது ‘வடசென்னை’யின் முதல் பாகம்

dhanush
cauveri manickam| Last Modified செவ்வாய், 10 அக்டோபர் 2017 (13:22 IST)
தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தின் முதல் பாகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது என்கிறார்கள்.
 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘வடசென்னை’. ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கருணாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மொத்தம் மூன்று பாகங்களாக இந்தப் படம் தயாராகிறது. தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி, வைரலானது. அடர்ந்த தாடியுடன், அதுவும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் இருந்தது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

வடசென்னை தாதா வாழ்க்கையைப் பற்றிய இந்தப் படம், ஒரு ரவுடியின் 30 வருட வாழ்க்கையை அச்சு அசலாகப் படம்பிடித்துக் காட்டும் என்கிறார்கள். இதில், முதல் பாகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாம். இது முடிந்ததும், பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :