1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (19:14 IST)

"வானம் கொட்டட்டும்" படத்தின் மூன்றாம் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
 
வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வருகிற 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் ஸ்னீக் பீக் காட்சி யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் பல வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்படும் கணவர் சரத்குமாரை பார்க்க அதீத காதலுடன் காத்திருக்கும் ராதிகாவின் நடிப்பு பிரம்மாதமாக உள்ளது.