பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து லைகாவின் அடுத்த படம்... கவனம் ஈர்க்கும் ஜெய்யின் புதிய பாடல்! !
தீராக் காதல் படத்தில் வீடியோ பாடல் ரிலீஸ்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜெய். இவர், சென்னை 28, சுப்ரமணியபுரம், புகழ், ராஜா ராணி, வாமனன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ள படம் தீராக் காதல். ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
சித்துகுமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் , முதல் சிங்கில் , டிரைலர் என அடுத்தடுத்து கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது தீராக் காதல் திரைப்படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்டாக வாலு பார்ட்டி எனும் வீடியோ பாடல் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ: