வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2020 (18:25 IST)

சிம்புவுக்காக உஷா ராஜேந்தர் செய்த ஆச்சரியமான விஷயம்!

சிம்புவுக்காக உஷா ராஜேந்தர் செய்த ஆச்சரியமான விஷயம்!
நீண்ட இடைவேளைக்குப் பின் தனது உடலை ஸ்லிம்மாக மாற்றிய நடிகர் சிம்பு தற்போது தனது குணநலன்களையும் மாற்றிக்கொண்டு படப்பிடிப்பில் ஒழுங்காக கலந்து கொண்டு வருகிறார் 
 
இருபதே நாட்களில் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் விரைவில் அந்தப் படத்தையும் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் சிம்புவின் ஒட்டுமொத்த மாற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்த அவரது தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.தாயிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத இந்த பரிசால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற சிம்பு கடந்த சில நாட்களாக இந்த காரை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அவர் எங்கு சென்றாலும் இந்த காரை தான் பயன்படுத்துவதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
சிம்புவுக்கு பொருத்தமான மணப் பெண்ணை பார்த்து வரும் அவரது தாயார் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது