செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (19:11 IST)

நடிகர் உதயநிதி மகனா இது...? டீனேஜ் வயசுல இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன்!

வாரிசு அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக தடம் பதித்தார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்  ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் அவரது பக்கம் திரும்பியது.

அதே எதிர்பார்ப்பில் இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா , கெத்து, சரவணன் இருக்க பயமேன் என தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியது. இதில் மனிதன், கண்ணே கலைமானே , சைக்கோ உள்ளிட்ட படங்கள் ஓரளவுக்கு ஓடியது.  இவர் கடந்த 2002ம் ஆண்டு கிருத்திகா என்ற கல்லூரி தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் இருக்கின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் மகனுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட அனைவரும் அவரது மகனை கண்டு ஷாக்காகி விட்டனர். இன்பநிதிக்கு தற்ப்போது 16 வயது ஆகிறது. டீனேஜ் வயதில் உதயநிதிக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறாரா என அனைவரும் இந்த புகைப்படத்தை கண்டு வியப்படைந்துள்ளனர்.