வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (11:58 IST)

மாமன்னன்’ திரைப்படம் எந்த ஓடிடியில்? எப்போது ரிலீஸ்? அதிரடி அறிவிப்பு..!

Mamannan
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.
  
இந்த படத்தின் வசூல் 50 கோடி ரூபாயை நெருங்கி உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இந்த படம் தான் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  திரையரங்குகளில் நல்ல வெற்றி பெற்ற இந்த படம் தற்போது ஓடிடியில்ரிலீஸ் செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாமன்னன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் ஜூலை 27ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது
 
 
Edited by Siva