வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (15:47 IST)

“தளபதி விஜய் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..” கவனம் பெற்ற உதயநிதியின் ட்வீட்!

நடிகர் விஜய்யின் 48 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் டிவீட் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தன்னுடைய டிவீட்டில் “தளபதி விஜய் அண்ணனுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு க ஸ்டாலினை அவரது கட்சியினர் தளபதி என்று அழைத்துவரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் விஜய்யை தளபதி என்று அழைத்து வாழ்த்தியது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.