Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிசுகிசுகளை வரவேற்கும் அரசியல் வாரிசு நடிகர்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (19:31 IST)
உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. 

 
 
இந்தபடத்தை தளபதி பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வேறு நிறுவன தயாரிப்பில் நடிக்கிறார்.
 
இப்படம் வரும் 11 ஆம் தேதி திரைக்கு வருகிரது. இந்த படத்தை பற்றி, உதயநிதி சமீபத்தில் பேசியது, நான் முதன் முதலாக கிராமத்துக் கதையில் நடித்திருக்கிறேன். சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வு இப்படத்தில் இருக்கும். 
 
இதுவரை நான் நடித்த படங்களில் இது மாறுபட்ட படம். இதுவரை நான் பல ஹீரோயின்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால், ஹீரோயின் தேர்வு இயக்குனர்தான். 
 
ஒரே ஹீரோயினுடன் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துவிட்டால், கிசுகிசு வந்துவிடும். ஆனால், கிசுகிசுவை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அதை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :