வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 5 மே 2018 (11:59 IST)

‘நடிகையர் திலகம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சமந்தா, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் இந்தப் படம் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், இரண்டு மொழிகளிலுமே ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
 
தெலுங்கில் வருகிற 9ஆம் தேதியும், தமிழில் 11ஆம் தேதியும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.