புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:17 IST)

பிரபல நடிகருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் !

நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் புதிய படம் ராயர் பரம்பரை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை சரண்யா நாயர் நடிக்கவுள்ளார். அத்துடன் தெலுங்கு பட நாயகி,அனுசுலா என்பவரும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

மேலும் இவர்களுடன் நடிகை கே.ஆர்.விஜயா, ஆனந்தராஜ், மனோபாலா,  மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம்நாத் இயக்கியுள்ளார், இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார், இப்படத்தை சின்னசாமி கிரியேசன் சார்பில் சின்னசாமி மெளனகுரு தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.