வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (12:02 IST)

ஹிப்ஹாப் ஆதியின் வீட்டில் கல் எரிந்த மர்ம நபர்கள் கைது!

hiphop
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின் வீட்டில் கல்லெறிந்து ரகளையில் ஈடுபட்ட 2 மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக நடித்து வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. இவரது வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இதனால் இவரது வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து ஆதியின் வீட்டில் கல் எரிந்தர்களை விரட்டி பிடித்தனர்.
 
இதனை அடுத்து ஆதியின் வீட்டில் கல்லெறிந்தவர்கள் பிரேம்குமார் மற்றும் அர்ஜுன் என்றும் குடிபோதையில் அவர்கள் யாருடைய வீடு என்று தெரியாமல் கல் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.