வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (12:14 IST)

இனிமேல் போரடிக்காது! திடீர் ட்ரெண்டாகும் தூர்தர்ஷன் ராமாயணம்!

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் மக்கள் வீடுகளில் தஞ்சம அடைந்திருக்கும் சூழலில் பழைய நாடகங்கள் தொடர்ந்து வைரலாக தொடங்கியிருக்கின்றன.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நாடு  முழுவதும் வீடுகளுக்கு அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில் 90களில் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமாக இருந்த ‘ராமாயணம்’ நாடகத்தை மறு ஒளிபரப்பு செய்வதாக தூர்தர்ஷன் அறிவித்தது.

இந்த அறிவிப்பை கேட்டவுடன் 80 மற்றும் 90 காலக்கட்டத்தை சேர்ந்த பலர் இதற்கு மகிழ்ச்சியும், ஆதரவும் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று முதல் எபிசோட் காலை 9 மணியளவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் தாங்கள் தங்கள் ராமாயணம் பார்த்த சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொள்ள தொடங்கியுள்ளனர். அதனால் ட்விட்டரில் #Ramayan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மேலும் சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களது பழைய டிவி சீரியல்களை மீண்டும் ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளனர்.