1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:23 IST)

மாரிமுத்து மறைவு அதிர்ச்சி அளிக்கிறது: ரஜினிகாந்த், டிடிவி தினகரன் இரங்கல்..!

திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
 
திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
 
திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், ‘மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி என தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ஜி மாரிமுத்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran