1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (08:13 IST)

நடிகை த்ரிஷாவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியான '96' திரைப்படத்தில் ஜானு கேரக்டரில் நடித்த த்ரிஷாவுக்கு உச்சகட்ட புகழ் கிடைத்த நிலையில் அவருடைய டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து தனது டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பதிவு செய்யும் கருத்துக்களை கண்டு கொள்ள வேண்டாம் என்றும் த்ரிஷா அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

த்ரிஷாவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் அவரது டுவிட்டர் பக்கத்தில் எந்தவிதமான சர்ச்சைக்குரிய பதிவுகளும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது