த்ரிஷா நடிக்கும் தீவிரவாத கதை 1818

Sasikala| Last Modified புதன், 4 ஜனவரி 2017 (09:59 IST)
2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு 1818 என்ற பெயரில் ஒரு படம் தமிழ்,  தெலுங்கில் தயாராகிறது. இதில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 
இப்படத்தை ரிதுன் சாகர் இயக்குகிறார். இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமனும், பாடல்களுக்கு மதன் கார்க்கியும் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
த்ரிஷா தற்போது மோகினி, சதுரங்க வேட்டை 2, 96 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :