புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (08:04 IST)

"கார்த்திக் டயல் செய்த எண்"... ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரிலீஸ் தேதியை சொன்ன திரிஷா!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் ஒரு சிலர் வீட்டில் யூடியூப் சேனல் ஆரம்பிப்பது, குறும்படம் எடுப்பது என பிஸியாகியுள்ளனர். அந்தவகையில் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள "கார்த்திக் டயல் செய்த எண்." என்ற குறும்படத்தின் அண்மையில் டீசர் வெளியாகியுள்ளது.

த்ரிஷா நடித்துள்ள இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உணர முடிகிறது. காரணம் கார்த்திக் கதாபாத்திரத்துடன் ஜெஸி பேசுகிறார். கூடவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசையுடன் இந்த டீசர் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிலளித்த திரிஷாவிடம் அவரது ரசிகர் ஒருவர். குறும்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என கேட்டதற்கு "இசையமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வேலை முடிந்தவுடன் ரிலீஸ் ஆகும் என பதிலளித்துள்ளார்.