வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (15:17 IST)

த்ரிஷாவின் மோகினி படத்தில் ஹாரிபாட்டர் டீம்

த்ரிஷாவின் மோகினி படத்தில் ஹாரிபாட்டர் டீம்

த்ரிஷா நடித்துவரும் மோகினி படத்தின் கிராபிக்ஸ் பணிகளை, ஹாரிபாட்டர் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்த அதே டீம் கவனிக்கிறது.


 
 
மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துவரும் பேய் படம், மோகினி. இதில் சமையல் கலைஞராக த்ரிஷா நடிக்கிறார். பேயாக பறக்கும் காட்சிகள் கணிசமாக வருகிறதாம் இதில். லண்டனில் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நடந்துள்ளது.
 
பேய் பறக்கும் காட்சிகள் உள்ளிட்ட கிராபிக்ஸ் காட்சிகளுக்காக, ஹாலிவுட் ஹாரிபாட்டர் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை கவனித்த டீமை ஒப்பந்தம் செய்துள்ளார் மாதேஷ். அவர்கள்தான் இப்போது கிராபிக்ஸ் பணிகளை கவனித்து வருகின்றனர்.
 
பாங்காக் மற்றும் மெக்சிகோவில் மோகினியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடக்க இருக்கின்றன.