1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2017 (13:00 IST)

த்ரிஷாவின் கர்ஜனை.... படப்பிடிப்பு தொடங்கியது

அறிமுக இயக்குர் சுந்தர் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்துக்கு கர்ஜனை என்று  பெயர் வைத்துள்ளனர்.

 
இந்தியில் வெளிவந்த, சாதி ஆவண கொலைக்கு எதிரான என்.ஹெச்.10 திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகி  மையப் படமான இதில் த்ரிஷா நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சுந்தர் படத்தை இயக்குகிறார்.
 
இந்தப் படத்துக்கு கர்ஜனை என்று பெயர் வைத்துள்ளனர். அமித் பார்கவா, வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, மதுரை  முத்து ஆகியோரும் நடிக்கின்றனர்.