வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 25 மே 2017 (13:24 IST)

இறுதிவரை நிறைவேறாத த்ரிஷாவின் ஆசை

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற த்ரிஷாவின் ஆசை, கடைசிவரை நிறைவேறவில்லை.


 

த்ரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ஹீரோயினாக நடித்து, டாப் நடிகையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஹீரோயினுக்கு ஐந்தாறு வருடங்கள் தான் மவுசு என்ற கோட்பாட்டைத் தகர்த்தெறிந்தவர். கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார் த்ரிஷா.

ஆனால், எல்லா ஹீரோயின்களும் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரொம்பவே ஆசைப்பட்டார். பல பேட்டிகளில் கூட தன்னுடைய ஆசையை வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், இதுவரை அந்த ஆசை நிறைவேறுவதற்கான அறிகுறி கூட தெரியவில்லை. பா.இரஞ்சித் இயக்கும் படத்திலாவது ரஜினியுடன் ஜோடி சேரலாம் என ஆசைப்பட்டார். ஆனால், அவர்களோ பாலிவுட் நடிகையான ஹீமா குரேஷியை ஒப்பந்தம் செய்துவிட்டனர். ஆக, கடைசிவரை த்ரிஷாவின் ஆசை நிறைவேறாது போலிருக்கிறது.