1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (20:05 IST)

சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்த த்ரிஷா!

ஆன்மீக சாமியாரும் யோகா குருவுமான ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவராத்திரி விழாவில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்வது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பிரபல நடிகை த்ரிஷா அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
 
இன்று காலை அஜித் குறித்து பேட்டி அளித்த த்ரிஷா பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாலையில் ஜக்கி வாசுதேவை சந்தித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜக்கி வாசுதேவ் உடனான சந்திப்பு குறித்து த்ரிஷா தனது டுவிட்டரில், 'ஒரு அமைதியான தெய்வீகமான ஆன்மீக குருவை சந்தித்துள்ளேன்' என்று குறிப்பிட்டு அவருடன் எடுத்து கொண்ட இரண்டு புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
ஏற்கனவே தமன்னா உள்பட பல கோலிவிட் நடிகைகள் ஜக்கி வாசுதேவ் அவர்களை நேரில் சந்தித்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் த்ரிஷாவும் இணைந்துள்ளார். திரையுலகை பொருத்தவரையில் தற்போது கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது