திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (15:55 IST)

விஜய்யை அடுத்து அஜித்துக்கும் ஜோடியாகும் திரிஷா!

அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் படம் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

சில தினங்களுக்கு வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூ மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே திரிஷா விஜய் 67 படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.