1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (18:25 IST)

த்ரிஷாவின் ‘தி ரோடு’ டிரைலர் ரிலீஸ்.. இணையத்தில் வைரல்..!

பிரபல நடிகை த்ரிஷா நடித்த தி ரோடு என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
மதுரை அருகே மர்மமான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்து வரும் த்ரிஷாவுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. 
 
இதனை அடுத்து அந்த விபத்து செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது என்பதும் அதை ஏற்படுத்தியது யார் என்பதையும் அவர் கண்டுபிடிக்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் இழப்புகள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து வெளியே வருகிறது. 
 
த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில்  சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா  உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் வசீகரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Mahendran