Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே நேரத்தில் மூன்றா?: திரையுலகை ஆச்சரியப்படவைத்த திரிஷா


bala| Last Updated: வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:26 IST)
தமிழ் திரையுலகில் நீண்ட வருடங்களாக கதாநாயகி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் திரிஷா.  தொடர்ந்து நடிகர்களுடன் டூயட் பாடிவந்த திரிஷா தற்போது கதையின் நாயகியான வேடங்களை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். காரணம் நயன்தாரா கொடுத்து வரும் வெற்றிகளே.

 

தற்போது திரிஷா மாதேஷ் இயக்கத்தில் மோகினி, புதிய இயக்குனர் இயக்கத்தில் கர்ஜனை மற்றும் சதுரங்க வேட்டை 3 ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள்.  இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் தற்போது முடிந்துவிட்டது. ஒரே நேரத்தில் 3 படங்களை எந்த சிக்கலும் இல்லாமல் திரிஷா முடித்துக் கொடுத்ததை திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சமீபத்தில் திரிஷா நடித்த நாயகி படு தோல்வி அடைந்தது. இதனால் அடுத்து ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

இந்த படங்களாவது அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :