1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2017 (16:58 IST)

இன்று ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் பாடல்கள் வெளியீடு

ரஹ்மான் ரசிகர்களுக்கு இன்று திருவிழா. அவர் இசையமைத்த படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 
ரஹ்மான் தற்போது காற்று வெளியிடை, 2.0 படங்களுக்குதான் இசையமைத்து வருகிறார். அந்தப் படங்களின் பாடல்களை  இதுவரை வெளியிடவில்லையே என்று நெற்றியை தேய்க்க வேண்டாம். இது இந்திப் படம்.
 
ஜனவரி 13 வெளியாகும் ஆதித்ய ராய் கபூர், ஷ்ரத்தா கபூர் நடித்த ஓகே ஜானு படத்துக்கு ரஹ்மான்தான் இசை. இன்று அதன்  பாடல்களை வெளியிட்டுள்ளனர்.
 
இசைக்கு ஏது மொழி... பாடல்களை காது குளிர கேட்டு மகிழுங்கள்.