எஸ்ராவிடம் அடிபணிந்த சி 3

Sasikala| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (17:29 IST)
எஸ்ரா என்றால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என நினைக்க வேண்டாம். தமிழகத்தில் அவரைத்தான் சுருக்கமாக எஸ்ரா என்று அழைக்கிறார்கள். இந்த எஸ்ரா பிருத்விராஜ் நடித்துள்ள மலையாளப் படம்.

 
சென்ற வாரம் சூர்யாவின் படத்துடன் எஸ்ரா வெளியானது. பிருத்விராஜ் படத்தை சி 3 அடித்து வீழ்த்தும் என்று பலரும் நினைத்தவேளை, சி 3 படத்தைவிட அதிகம் வசூலித்துள்ளது எஸ்ரா.
 
இதற்காக நன்றி தெரிவித்திருக்கும் பிருத்விராஜ், படத்தின் கதையை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பகிர்வதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு அந்த அனுபவத்தை இதுபோன்ற செயல்கள் கெடுக்கின்றன என அவர்  கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :