வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (13:44 IST)

விருப்பம்னா ரிலீஸ் பண்ணுங்க.. இல்லாட்டி போங்க! – தயாரிப்பாளர்கள், திரையரங்குகள் மோதல்!

திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கைகளை ஏற்க முடியாது என திருப்பூர் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளில் தயாரிப்பாளர்களுக்கு பங்களிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கோரிக்கைகளுக்கு உடன்படாத பட்சத்தில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படாது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் “தயாரிப்பாளர்கள் கோரிக்கைகளை வைத்து அதை ஏற்காவிட்டால் படம் திரையிட முடியாது என்கிறார்கள். ஓடிடியில் படங்களை வெளியிட எங்களிடம் கேட்டுவிட்டா செய்கிறார்கள். படங்களை வெளியிடுவதும், வெளியிடாததும் அவர்கள் விருப்பம். படங்களே வெளியிடவில்லை என்றால் நாங்கள் ஐபிஎல், கல்யாண மண்டபம் என மாறிக்கொள்கிறோம். அவர்கள் வைத்துள்ள எந்த கோரிக்கைக்கும் பேச்சுவார்த்தைக்கே  இடம் கிடையாது” என்று கூறியுள்ளார்.