ஜி 5 ல் ரிலீஸாகிறதா டிக்கிலோனா திரைப்படம்?
டிக்கிலோனா திரைப்படத்தை ஜி 5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
சந்தானம் நடித்து வந்த டிக்கிலோனா என்ற படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகக் காத்திருந்தது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றிருந்ததால் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வந்தன. அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.
ஆனால் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் அதற்கு கொரோனா வழிவிடவில்லை, இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஜி 5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்ததை நடத்துவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.