1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (20:22 IST)

''டிக்டாக்'' பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை ! ரசிகர்கள் அதிர்ச்சி

RAMESH
டிக்டாக் பிரபலம் ரமேஷ் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் இடையே பிரபலமாக இருந்த சமூகவலைதளம் டிக்டாக். இந்த டிக்டாக்கின் மூலம் பல திறமையாளர்கள் உலகில் அறியப்பட்டனர்.

அவர்களுக்கு ஃபாலோயர்களுடம் அதிகரித்தனர். இதன் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த பலர் சினிமாவிலும் நடித்தனர்.

இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் டான்ஸ் மான்ஸ்டர் ரமேஷ் இன்று கேபி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பின் 10 வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இவர், அஜித்தின் துணிவு படத்தில் நடனம் ஆடியிருந்தார். அதேபோல், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன்  நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.