வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:00 IST)

டாக்டர் படத்தை அடுத்து ஓடிடிக்கு செல்லும் விஜய் சேதுபதியின் படம்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர் . இந்தப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸூக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைக் காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படங்கள் வரிசையாக ஓடிடி பக்கம் செல்ல ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் ஓடிடிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.