1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (12:52 IST)

ராணுவ அதிகாரி வேடத்தில் அதர்வா! – வைரலாகும் நவரசா “துணிந்த பின்” போஸ்டர்!

மணிரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் நவரசா ஆந்தாலஜியின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் ஒன்பது முக்கிய இயக்குனர்கள் இயக்க, ஒன்பது முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. மணிரத்னம் தயாரித்துள்ள இந்த படம் நெட்ப்ளிக்ஸில் ஆகஸ்டு 6ம் தேதி வெளியாகிறது.

இதில் அதர்வா, சூர்யா, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இதில் இடம்பெற்றுள்ள 9 கதைகளில் ஒன்றான “துணிந்த பின்” போஸ்டர் வெளியாகியுள்ளது. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த கதையில் கிஷோர் வில்லனாக நடித்துள்ளார், இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.