வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (17:08 IST)

வருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஓவியா ஒரே பிஸி!

பிக் பாஸ் முதல் சீசனில் நாயகியாக வலம் வந்தவர் ஓவியா. இதில் வெற்றி பெற்றது ஆரவ் என்றாலும் மக்களின் மனங்களை வென்றது ஓவியாதான். இப்ப  விஷயத்துக்கு வருவோம்..


பிக் பாஸ் முதல் சீஸன் முடிவடைந்து ஒருவருடம் ஆகிடுச்சு, இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. ஆனால் எந்த பெரிய  இயக்குனர்களின் படங்களிலோ, அல்லது நடிகர்களின் படங்களிலோ ஓவியா நடிக்கவில்லை. 

 
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார் ஓவியா. 'படங்களில் நடிப்பதைவிட இதுல ரிலாக்சா ஃபீல் பண்ண  முடியுது'  என்று பீல் பண்றாராம் ஓவியா. சில மாதங்களுக்கு முன் 'ஜாக்குவார் கார் வாங்கியிருக்கிறார்' என்பதே ஓவியா குறித்த வந்த கூடுதல் தகவல்.  வருஷம் முழுவதும் பாரீன் டூரு... ஜாக்குவாரு காரு... ஆல்லேடஸ் புரோக்கிராம்... ஓவியா இப்ப செம்ம ஹேப்பி...