புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (07:55 IST)

இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்த தமிழ் படங்களான பிச்சைக்காரன் 2, ராவண கோட்டம் மற்றும் ஃபர்ஹானா ஆகிய படங்கள் இன்று ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன.

பிச்சைக்காரன் 2: பிச்சைக்காரன் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி வெளியிட்டார் விஜய் ஆண்டனி. முதல் பாகம் அளவுக்கு இல்லாவிட்டாலும், இந்த படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் நாளை இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

ஃபர்ஹானா : மான்ஸ்டர் மற்றும் ஒருநாள் கூத்து ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படம். விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூலில் ஜொலிக்கவில்லை. இந்நிலையில் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ராவணக்கோட்டம் : தமிழ் சினிமாவில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒரு வெற்றிக்காக போராடி வரும் சாந்தணு நடித்த திரைப்படம். மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால் பெரிய சலசலப்பை உருவாக்கவில்லை. இன்று முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.